மலாக்கா, ஆகஸ்ட் 30 – தனது சொந்த மகள்களையே பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 39 வயது காவலாளி ஒருவரை மலாக்கா காவல்துறை கைது செய்துள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக, 17 வயதான அந்த காவலாளியின் மூத்த மகள், அலோர் காஜா காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.
தனது 14 வயது முதலே, தந்தையால் கற்பழிக்கப்பட்டதாகக் அவர் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அவரின் 13 வயதாகும் தங்கையும், இந்த ஆண்டு ஜூலை முதல் அந்த கொடூர தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, இன்று குற்றவியல் சட்டத்தின் 376-யின் கீழ், அந்த காவலாளி கைதுசெய்யப்பட்டான்.