கோலாலம்பூர், பிப் 3 – பிரபல ஆங்கில ‘வோர்டல்’ (Wordle) சொல் விளையாட்டு, தற்போது தமிழில் சொல்லாடல் எனும் பெயரில் அறிமுகமாகியுள்ளது. ‘வோர்டிலை’ அடிப்படையாகக் கொண்டு மலேசியாவைச் சேர்ந்த கணினி வல்லுநர் “ஓம்தமிழ்” முகிலன் முருகன், தமிழில் “சொல்லாடல்” விளையாட்டை உருவாக்கியுள்ளார்.
சொல்லாடல் செயலியின் நோக்கம், தமிழில் ஏற்ற பொருள் உடைய – பொருள் ஆழமுடைய சொற்களைப் பயன்படுத்துவதாகும். தமிழோடு விளையாடி சொற்களைப் பற்றிய அறிவுத்திறனை இவ்விளையாட்டின் மூலம் செம்மைப்படுத்தலாம். மேலும், கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் சொல்லாடல் செயலியை மாணவர்களுக்கு நாள்தோறும் சிறு போட்டியாகவோ பயிற்சியாகவோ நடத்தலாமென முகிலன் கூறியுள்ளார். omtamil.com/soladle எனும் தளத்தின் மூலமாக சொல்லாடல் விளையாட்டை விளையாடலாம்.