
கோலாலம்பூர், டிச 28 – சொஸ்மா சட்டத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதுடன் தடுத்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும்படி ஜெலுத்தோங் DAP நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர் ராயர் கேட்டுக்கொண்டுள்ளார். சொஸ்மா சட்டத்தில் தொடர்பு உள்ளவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் வலியுறுத்தினார். சொஸ்மா சட்டத்தில் ஜாமின் மறுக்கப்படுவது மற்றும் 28 நாட்கள் தடுத்து வைக்கும் நடைமுறையும் மறுஆய்வு செய்யப்பட வேண்டுமென இன்று ராயர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். அதோடு சர்ச்சைக்குரிய சொஸ்மா சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனையையும் ராயர் வரவேற்றார்.