Latestமலேசியா

சொஸ்மா திருத்தங்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – எம்.பி.க்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஆக 28 – சர்ச்சைக்குரிய சொஸ்மா சட்டத்தை ரத்துச் செய்வதில் அரசாங்கம் போதுமான கடப்பாட்டை கொண்டிருக்காதது குறித்து மனித
உரிமைக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்தனர். 2012ஆம் ஆண்டின் சொஸ்மா சட்டத்தின் கீழ் எந்தவொரு திருத்தங்களும் அனைத்துலக மனித உரிமை தரங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். உத்தேச மாற்றங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்போது அவை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ச்சியை பிரதிபலிக்க வேண்டுமே தவிர பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடாது என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எவரும் மனித உரிமைகளுக்கு எதிராக அதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினர். சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்களுக்கு ஜாமின் வழங்குவற்கு அனுமதிக்கும் 13ஆவது விதியில் திருத்தம் செய்யப்படும் என சட்ட மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கான துணையமைச்சர் அண்மையில் கூறியிருந்ததைத் தொடர்ந்து இந்த அறைகூவலை ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்தனர். சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றத்தின் முடிவு தெரியும்வரை ஜாமின் வழங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!