கோலாலம்பூர், மே 10 – எட்டாவது முறையாக மீண்டும் அன்னையர்களின் சிறப்பை போற்றும் விதமாக ‘அன்னைக்கு ஓர் ஆராதனை’ எனும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக சோமா அரங்கில் நடந்தேறியது.
அன்னையர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற மேன்மையான நோக்குடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், The world media நிறுவனத்தின் ஆதரவுடன் பல அன்னையர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர் டத்தின் ஜெயகோகிலவாணி தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து Maa beauty parlour எனும் அழகு ஒப்பனை நிலையத்தின் நிறுவனக் குழுமத்தின் தலைவர் மகா லட்சுமி, மலேசியாவில் நல்ல காரியங்களுக்கு ஒரு கொடை நெஞ்சராகவும் கலைத்தாயாகவும் விளங்கும் மனித நேய மாமனி ரத்தினவள்ளி, சமூக சேவையாளரும் தொழிலதிபருமான எஸ். கலைவாணர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.