Latestமலேசியா

ஜகர்த்தாவில் முஹிடினுடன் சந்திப்பா? இஸ்மாயில் சப்ரி மறுப்பு

கோலாலம்பூர், டிச 14 – அண்மையில் ஜகார்த்தாவில் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை சந்தித்து ஏதோ ஒன்றை திட்டமிட்டதாக வெளியான தகவலை முன்னாள் பிரதமரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார். இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை பரப்பிய தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். டிசம்பர் 8 – ஆம் தேதி நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளத் தவறியதைத் தொடர்ந்து இப்படியொரு குற்றச்சாட்டு பரப்பப்பட்டுள்ளதாக இஸ்மாயில் சப்ரி கூறினார். இந்த குற்றச்சாட்டை பரப்பியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமது வழக்கறிஞருக்கு பணித்திருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் அம்னோவின் மற்றொரு உதவித் தலைவரான Mahdzir Khalid – ட்டும் கலந்துகொள்ளவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!