Latestமலேசியா

கடற்படை கேடட் சூசைமாணிக்கம் இறப்பதற்கு முன் முகாமில் தாக்கப்பட்டார் – நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 8 – கடற்படை கேடட் J. Sosaimanicckam இறப்பதற்கு முன், KD Sultan Indris கடற்படை தளத்தில் மூத்த அதிகாரியால் தாக்கப்பட்டதாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. Ariff எனப்படும் அந்த அதிகாரி சூசைமாணிக்கத்தின் வயிற்றில் அமர்ந்து அவரை பலமுறை அறைந்ததை தாம் பார்த்ததாக அந்த கடற்படைத் தளத்தின் முன்னாள் கேடட் பயிற்சி வீரராக இருந்த Anas Hakimi Mat @ Ahmad இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது தெரிவித்தார். இந்த சம்பவம் சூசைமாணிக்கம் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நடந்ததாக அவர் கூறினார். அந்த நேரத்தில், நான் மற்றும் பலர் Push Up மற்றும் Squad Jump செய்து கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார். அப்போது Rahim என்று அழைக்கப்படும் மற்றொரு மூத்த அதிகாரியும் உள்ளே வந்து நிலைமையை கவனித்தார் என Anas கூறினார். அரசாங்கம் மற்றும் கடற்படைக்கு எதிராக அலட்சியம் காட்டியதாக சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்தபோது தற்போது வழக்கறிஞராக இருந்துவரும் Anas இதனை தெரிவித்தார்.

சூசைமாணிக்கத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறியதே அவரது மரணத்திற்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பல நபர்களால் சூசைமாணிக்கம் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

K.D Sultan Idris கடற்படைத் தள மேலதிகாரிகளால் சூசைமாணிக்கம் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும் Anas தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். சூசைமாணிக்கத்தின் சகோதரர்களான Charles மற்றும் Calcvin ஆகியோரும் இன்று சாட்சியமளித்தனர். பயிற்சியின்போது தாம் சித்ரவதைக்கு உள்ளாகுவதாகக்கூறி சூசைமாணிக்கம் குறுந்தகவல் அனுப்பியதாக சார்லஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடற்படை தளத்தில் உள்ள அதிகாரிகள் தமது சகோதரர் நோய்வாய்ப்பட்டபோதிலும் அவருக்கு விடுமுறை வழங்க மறுத்துவிட்டனர் என அவரது நண்பர்கள் கூறியதாகவும் Calvin தமது சாட்சியத்தில் தெரிவித்தார். கடந்த ஆண்டு, சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நடத்தப்பட்ட விசாரணையில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி Idah Ismail முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 17ஆம்தேதி தொடரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!