Latestஉலகம்

ஜகார்த்தா விமான நிலையம் மூலமாக வெளிநாட்டவர் இந்தோனேசியாவிற்குள் நுழையத் தடை

ஜகார்த்தா, பிப் 7 – ஜாகார்த்தா விமான நிலையம் மூலமாக , வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் தற்காலிக தடையை விதித்திருக்கின்றது. அந்நாட்டின் பிரபல சுற்றுலா தீவான பாலி , ஈராண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அனைத்துலக சுற்றுப் பயணிகளை வரவேற்ற சில தினங்களுக்குப் பிறகு ஜகார்த்தாவில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியாவில் தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை 36,000 -கும் அதிகமாக பதிவாகியிருப்பதோடு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மருத்துவமனைகளில் படுக்கைகள் 63 விழுக்காடு பயன்படுத்தப்பட்டுள்ளன. அதையடுத்து, ஜகார்த்தாவில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் , இந்தோனேசியாவிற்குள் பாலி விமான நிலையம் , Riau தீவில் உள்ள Batam, Tanjung Pinang விமான நிலையங்களின் மூலமாக நுழைய முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!