Latestஉலகம்

‘ஜங்கிள் சஃபாரி’ விபரீதத்தில் முடிந்தது ; புலி விரட்டியதால் தெறித்து ஓடிய சுற்றுப்பயணிகள்

இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில், ‘ஜங்கள் சஃபாரிக்கு’ சென்ற சுற்றுப்பயணிகள் சிலரை புலி ஒன்று துரத்தும் காணொளி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீப் நான்கு சக்கர வாகனத்தில், காட்டை வலம் வந்து கொண்டிருந்த அந்த சுற்றுப் பயணிகள், புலியை கண்டவுடன், அதன் அழகை இரசித்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, சினமடைந்த அப்புலி திடீரென வாகனத்தின் மீது பாய்ந்து, கர்ஜிக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.

சம்பவத்தின் போது வாகனத்தின் உள் அமர்ந்திருந்த சுற்றுப் பயணி ஒருவர் அந்த காணொளியை பதிவுச் செய்த வேளை ; வனத்துறை அதிகாரி ஒருவர் அதனை ட்விட்டரில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அச்சம்பவத்தில் சுற்றுப்பயணிகள் காயம் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், அச்சம்பவம் தொடர்பில் இணையதளவாசிகள், “ஊடுருவல்”, ” அடக்குமுறை” என கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!