கோலாலம்பூர், பிப் 9 – கடந்த ஜனவரி தொடங்கி நாட்டில் இதுவரை போலீஸ் தடுப்புக் காவலின் போது 7 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியுள்ளது. அதில் ஒரு மரணத்தில் மட்டுமே குற்றச் செயலுக்கான அம்சங்கள் இருப்பதாக, புக்கிட் அமான் உயர்நெறி- தர கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மாட் (Datuk Azri Ahmad ) தெரிவித்தார்.
மேலும் அந்த 7 மரணங்களில் நான்கு போலிஸ் லாக்கப்பிலும், இரண்டு மருத்துவமனைகளிலும், ஒன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலும் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். தடுப்புக் காவலின் போது ஏற்படும் மரணங்களை விசாரிப்பதற்காக, கடந்த ஜனவரி முதலாம் தேதி சிறப்பு குற்றச் செயல் விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டது. அப்பிரிவு போலீஸ் காவலின்போது ஏற்படும் மரணங்களை தீர விசாரிக்குமென Datuk Azri Ahmad உறுதியளித்தார்.