
கோலாலம்பூர்,டிச 29 – ஜனவரி முதலாம் தேதி தொடங்கி , சிலாங்கூரில் உணவுக் கடைகளில் வேலை செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. கடைகள், உணவகங்கள், அங்காடி கடைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் சமையல்காரர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமென, செலாயாங் நகராண்மைக் கழகம் நினைவுறுத்தி இருக்கின்றது.
அந்த உத்தரவை மீறும் தரப்புகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அந்த உத்தரவு வர்த்தக லைசென்ஸைப் பெற ஒரு நிபந்தனையாகவும் இடம்பெற்றிருப்பதாக அக்கழகம் குறிப்பிட்டுள்ளது. உணவு கடைகளில் சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிச் செய்யும் நோக்கத்தில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.