Latestஉலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ; நால்வர் மரணம்

தொக்கியோ, மார்ச் 17 – புதன்கிழமை இரவு ஜப்பானை 7. 3 magnitude அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும், குறைந்தது 90 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரமும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் கடலில் 1 மீட்டர் வரையில் பேரலைகள் எழுமென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, Fukushima -வில் அதிவேக ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!