
தோக்யோ, ஜன 26 – ஜப்பானின் மேற்குப் பகுதியில் கடுமையாக காற்று வீசியதில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கிய சம்பவத்தில் இருவர் மாண்டதோடு மேலும் 11 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் எண்மர் காப்பாற்றப்பட்டனர். 6,651 டன் எடைக் கொண்ட அந்த சரக்குக் கப்பல் ஹங்காங்கில் பதிவு செய்யப்பட்டதாகும். அக்கப்பலில் இருந்த 22 ஊழியர்கள் சீன மற்றும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஜப்பானின் Nagasaki மற்றும் தென் கொரியாவின் Jeju Jeju தீவுக்குமிடையே அக்கப்பல் அதிகாலை மணி 2.46அளவில் மூழ்கியதாக கூறப்பட்டது.