தோக்யோ, ஆகஸ்ட்-12, ஜப்பானின், தோக்யோ அருகேயுள்ள நரித்தா (Narita) விமான நிலையத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இடப்பக்க இயந்திரத்திலிருந்து வெள்ளைப் புகை கிளம்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், அதில் பயணிகள் எவரும் காயமடையவில்லையென, தீயணைப்பு மீட்புத் துறை உறுதிபடுத்தியது.
276 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் தரையிறங்கிய போது அந்த போயிங் 787 ரக விமானத்தில் கோளாறு ஏற்படிருக்கலாமென, விமான நிலையத் தரப்பு கூறியது.
விமான ஓடுபாதையில் டயரின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, அவ்விமானம் தரையிறங்கிய ஓடுபாதை இன்று காலை 7.40 மணியிலிருந்து சுமார் 50 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.