Latestஉலகம்

ஜப்பானில் பயணிகள் படகு மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்தனர்

தொக்யோ, ஏப் 25 – ஜப்பான், Hokkaido தீவில், பயணிகள் படகு மூழ்கிய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 16 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

Kazu 1 எனப்படும் அந்த பயணிகள் படகு , Hokkaido வடகிழக்கேயுள்ள Shiretoko தீபகற்பத்தை சுற்றுப் பார்க்கும் 3 மணி நேர பயணத்தை மேற்கொண்டிருந்தது. UNESCO- வால் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட அந்த பகுதியில் திமிங்கலம், கடற்சிங்கம் , கரடி போன்ற பிராணிகளைப் பார்ப்பதற்காக படகு பயணங்கள் மக்களிடையே பிரபலமாகும்.

இந்நிலையில், சம்பவத்தின் போது 26 பேர் இருந்த அந்தப் பயணப் படகு சாய்ந்து நீருக்குள் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!