Latestஉலகம்

ஜப்பானில் புயல்; இருவர் மரணம்

தோக்யோ, செப் 24 – ஜப்பானின் மத்திய பகுதியில் கடுமையான மழை பெய்ததோடு சூறாவளியும் தாக்கியது. அதோடு அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 40 வயது ஆடவர் ஒருவர் மாண்டதாக கியுட்டோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொரு ஆடவரின் கார் நீர் தேக்கத்தில் விழுந்ததில் அவர் மூழ்கியதாக கூறப்பட்டது. ஜப்பான் தலைநகர் தோக்யோவின் தென்மேற்கே உள்ள சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!