Latestமலேசியா

சொகுசு கார்கள் வாங்கி விற்பதில் மோசடி செய்த இழுவை டிரக் ஒட்டுநர்

கோலாலம்பூர், மார்ச் 6 – பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி விற்க பணம் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

சமீபத்தில் அந்த சந்தேக நபரான Thiviyen Raj பயன்படுத்திய கார் விற்பனைக்கு RM 2000 ரிங்கிட் வரை கமிஷன் தருவதாக ஒருவருக்கு உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அதற்கு முதலீடாக பணம் தேவைப்படுவதால் முதற்கட்டமாக RM 100,000 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார்.
பின்னர், மீண்டும் 14 நாட்களுக்கு பின் விலையுர்ந்த கார்களை வாங்க கூடுதலாக RM 100,000 ரிங்கிட்டும் அந்த நபரிடமிருந்து வாங்கியிருக்கின்றார் திவியன்.

இதனிடையே, 20 நாட்களில் கிடைக்கும் லாபத்தில் கமிஷன் தருவதாக கூறியவர், கால அவகாசத்திற்கு பின்னும் எந்த பணத்தையும் அளிக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது..

இந்நிலையில் ம் 26 வயதான Thiviyen Raj இன்று தம்மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை வாசித்தபோது Thiviyen Raj, BMW கார் மற்றும் RM 200,000 ரிங்கிட்டை ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரிடமிருந்து BMW காரை வாங்கியதற்காக RM 225,000 மதிப்பிலான இல்லாத காசோலையை கொடுத்த அந்த 27 வயதான தனியார் நிறுவனத்தின் முன்னாள் மேற்பார்வையளரே தன்னை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியிருக்கின்றார்.

மேலும், 40 வயது மேலாளருக்குப், பயன்படுத்திய சொகுசுச் காரை வாங்கித் தருவதாக நம்பி ஏமாற்றைய குற்றச்சாடையும் திவியென் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த இரண்டு குற்றங்களும் கடந்த ஆண்டு 3 ஆகஸ்ட் அன்று நடைபெற்றுள்ளது.

இவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று குற்றவியல் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருகிறது.

ஜாமின் வழங்கப்பட்ட இவர் வழக்கு முடியும் வரை பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!