ஜப்பான், ஆகஸ்ட் 30 – ஜாப்பான் நாட்டில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடந்துள்ளது.
கியுஷூ (Kyushu) பகுதியில் சூறாவளி கரையை கடந்ததும், கடுமையான மழைப்பொழிவில், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ள நிலையில், 8 பேருக்கு மேல் பலத்த காயமும், 70 பேர் சிராய்ப்பு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஜாப்பான் வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து கொள்ளும்படி தீவிர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
சூறாவளியால் மின்விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டு, ஏறக்குறைய 200 கட்டிடங்களும் சேதமடைந்தன.