Latestவிளையாட்டு
ஜப்பான் Kumamoto மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி – பியர்லி தான் – தீனா காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வு

கோலாலம்பூர், நவ 16 – ஜப்பானில் நடைபெற்றுவரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ‘Kumamoto Masters’ பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான பியர்லி தான் – M. தீனா காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றனர். அவர்கள் 21 -17 , 21 -16 என்ற நேர்செட்டுகளில் ஜப்பானின் ருய் ஹிரோகமி – யுனா காதோ ஜோடியை 41 நிமிடங்களுக்குள் வீழ்த்தினர். உலகின் 13 ஆவது நிலை ஆட்டக்காரர்களான கணிக்கப்பட்டுள்ள பியர்லி தான் – M. தீனா இணை நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியாட்டத்தில் ஜப்பானின் மற்றொரு ஜோடியான ரெனா மியாவுரா – அயகோ சகுரமோட்டோவுடன் மோதவிருக்கின்றனர்