Latestமலேசியா

ஜவுளி,பொற்கொல்லர் உட்பட 3 துறைகளுக்கான வேலை விசாவை புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு

கோலாலம்பூர், மார்ச் 27 – பொற்கொல்லர், முடிதிருத்தும் மற்றும் ஜவுளி ஆகிய 3 துறைகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பதற்கான PLKS எனப்படும் தற்காலிக வேலை அனுமதிக்கான பாஸ்-சை புதுப்பிக்கும் காலக்கெடுவை அரசாங்கம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

இதற்கு முன்னர், அந்த பாஸ்-சை புதுப்பிக்கும் இறுதி காலக்கெடு மார்ச் 15 -ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வாண்டு ஜூன் 15 -ஆம் தேதி வரை , அந்த காலக்கெடுவை நீட்டித்திருப்பதாக உள்துறை துணையமைச்சர் சம்சூல் அனுவார் நசாரா ( Shamsul Anuar Nasarah ) தெரிவித்தார். இதற்குப் பின்னர் அந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் அவர் மக்களவையில் கூறினார்.

முன்னதாக, மார்ச் மாதத்திற்கு முன்பாக PLKS அனுமதி காலாவதியான , அந்த 3 துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை அனுமதியை மேலும் ஓராண்டு வரை முதலாளிகள் நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனிடையே, இந்தியர்கள் அதிகம் ஈடுபடும் இந்த 3 துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர் விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் அடுத்த கட்ட முடிவு தொடர்பில் அரசாங்கம் அறிவிக்குமெனவும் துணையமைச்சர் கூறினார்.

அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சந்திப்பு நடத்தி திரட்டிய ஆய்வினை மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் முன் வைத்தப் பின்னர் , அதன் தொடர்பில் எடுக்கப்படும் மேற்நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!