
ஜாசின், நவ 28 – மலாக்கா, ஜாசின் அருகில், விரைவு பேருந்து ஒன்று, மறுசுழற்சிக்கான பொருட்களை ஏற்றியிருந்த டிரேய்லர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அச்சம்பவத்தில் 16 பயணிகள் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை மணி 3.50- வாக்கில் நிகழ்ந்த அந்த விபத்தின்போது, சம்பந்தப்பட்ட பேருந்தில் சிங்கப்பூர் நாட்டவர்கள் உட்பட 27 பேர் பயணித்தனர்.
இவ்வேளையில், அந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக, Jasin Bestari தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை அதிகாரி Azman Md Dawam தெரிவித்தார்.