
கோலாலம்பூர், மார்ச் 14 – Jana Wibawa திட்டத்தில் தொடர்புடைய லஞ்ச ஊழலில் முக்கிய நபராக செயல்பட்ட 54 வயதுடைய Datuk Roy கைது செய்யப்பட்டார்.
சரணடைவதற்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தடுத்துவைக்கும் உத்தரவை பெறுவதற்காக அவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் என கூறப்பட்டது.
டத்தோ Roy கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் Macc யின் இயக்குனர் Razaliah Abdul Rahman உறுதிப்படுத்தினார். பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு உதவுவதற்காக கோவிட் தொற்று காலத்தின்போது பொருளாதார முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முஹிடின் யாசின் அரசாங்கம் Jana Wibawa திட்டத்தை அறிமுகப்படுத்தியது.