Latestமலேசியா

மனமுருகி மழையை ‘வரவழைத்த’ மாணவன்; கொண்டாடும் நெட்டிசன்கள்

சிலாங்கூர், பிப்ரவரி 16 – பள்ளியில், உடற்பயிற்சி நேரத்தின் போது, மழை வர வேண்டி மனமுருகிய மாணவனின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிலாங்கூரில் உள்ள பள்ளியொன்றின் திடலில் தான் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

மற்ற மாணவர்கள் எல்லோரும் உடற்பயிற்சியில் தீவிரமாக இருந்த போது, அவன் ஒருவன் மட்டும் ஆகாயத்தை நோக்கி மழையே வா வா என வேண்டிக் கொண்டிருந்தது ஆசிரியரின் கண்ணில் பட்டு விட்டது.

அவனது செயலைக் கண்டு சிரிப்பை அடக்காது, ஆச்சரியத்தில் ஆசிரியர் அவனிடம் விசாரித்த போது, அவ்விடம் ஆபத்தானது என்றும், எனவே தான் கடவுளிடம் மழையை வேண்டியதாகவும் அவன் பெருமையுடன் கூறியிருக்கிறான்.

அம்மாணவன் மழை வர வேண்டி மனமுருகி பிராத்தனை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவனது ‘வேண்டுதல்’ கடவுளின் காதுக்கு எட்டியதோ என்னவோ, சிறிது நேரத்தில் மழை அங்குக் கொட்டித் தீர்த்தது.

ஆகக் கடைசியாக பார்த்ததில் அந்த டிக் டோக் வீடியோ 20 லட்சம் வியூஸ்களைக் கடந்து, 1 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் 2,433-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றிருக்கிறது.

“ மழையை வரவழைத்த மகா பிரபு நீ, தம்பி!” என அந்த சுட்டிச் சிறுவனை நெட்டிசன்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!