
கோலாலம்பூர், மார்ச் 14 – Jana Wibawa திட்டம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வலையில் அரசியல்வாதி ஒருவரின் மகனும் சிக்கியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த திட்டம் தொடர்பான ஊழலில் முக்கிய பின்னணியாக இருந்த டத்தோ ரோய், சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் மகனின் பெயரை எம்.ஏ.சி.சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தகரான அந்த நபரும் தற்போது எம்.ஏ.சி.யின் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். Jana Wibawa ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்றதன் தொடர்பில் எம்.ஏ.சி.சி-யின் அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.