
கோலாலம்பூர், மார்ச் 13 – Jana Wibawa திட்டம் தொடர்பில் விசாரிப்பதிலிருந்து தப்பிக்க, 4 லட்சம் ரிங்கிட் வரை கையூட்டு கேட்டதாகவும் வாங்கியதாகவும் , MACC அதன் சொந்த அதிகாரி ஒருவரையும் பெண் உட்பட மேலும் மூவரையும் தடுத்து வைத்தது.
அதில், தடுத்து வைக்கப்பட்ட பெண் , MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த ஊழல் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த Datuk Roy எனும் நபரை MACC தேடி வருவதாக அவ்வாணையத் தலைவர் அசாம் பாக்கி தெரிவித்தார் .