Latestமலேசியா

ஜாலான் கெப்போங்கில் திடீரென தோன்றிய பெரிய குழியில் வேன் விழுந்தது

கோலாலம்பூர், செப் 23 – தலைநகர், ஜாலான் கெப்போங்கில் ஏற்பட்ட பெரிய குழியில், வேன் ஒன்று விழுந்தது. இன்று அதிகாலை மணி ஆறு வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது, சுங்கை பூலோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன், திடீரென உள்வாங்கியதை உணர்ந்ததாக, வேன் ஓட்டுனரனான குவா தெரிவித்தார்.

எனினும், வேன் பாதி மட்டுமே குழியில் விழுந்ததால், தாம் பாதுகாப்பாக அதிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் சொன்னார். சம்பவத்தின் போது, சாலையில் அதிகமான அளவு நீர் தேங்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பகுதியை போலீசார் உடனடியாக பொதுமக்களுக்கு மூடியதோடு, வாகன போக்குவரத்தை மாற்று சாலைக்கு திருப்பிவிட்டதாக, கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தெரிவித்தார்.

சாலையில் குழி ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனினும், குழியிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. தீயணைப்பு மீட்பு படையினர், DBKL கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதனை தொடர்ந்து, குழியில் விழுந்த வேனை, காலை மணி 9.15 வாக்கில் DBKL அதிகாரிகள் இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!