Latestமலேசியா

தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசியா தகுதி பெற்றது

கோலாலம்பூர், பிப் 17 – ஷா அலாமில் நடைபெற்று வரும் ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றதன் மூலம் மலேசிய பேட்மிண்டன் குழு இவ்வாண்டு தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வுபெற்றது. ‘Setia City’ விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் மலேசியா 3 – 1 என்ற ஆட்டக்கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. இன்று மாலை மணி 4 அளவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியக் குழு ஜப்பானை சந்திக்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டின் தாமஸ் கிண்ண சாம்பியனான இந்தியாவை 3-2 என்ற ஆட்டக் கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவின் ‘Chengdu’ வில் நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!