கோலாலம்பூர், செப்டம்பர் -24 – தலைநகர், Jalan Sultan Ismail சாலையில் நேற்று ஏற்பட்டது நிலத்தடி நீர் குழாய் உடைந்த சம்பவமே ஒழிய வைரலான தகவல் போல் நில அமிழ்வு அல்ல.
கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) அதனை உறுதிப்படுத்தியது.
Air Selangor நீர் விநியோக நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தடி குழாய் உடைந்ததால் ஏற்பட்ட கசிவே, அச்சாலையிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கக் காரணம்.
நீரின் அழுத்தத்தால் உருவான சமச்சீரற்ற சாலையை சீரமைக்கும் பணிகள் நேற்று ஒரே இரவில் நடந்து முடிந்தன.
இன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் அப்பணிகள் நிறைவுற்று, சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
Jalan Raja Chulan-னை நோக்கிச் செல்லும் Jalan Sultan Ismail சாலையில் நிலம் உள்வாங்கியதாகக் கூறி ஒரு வீடியோ முன்னதாக வைரலானது.
நில அமிழ்வு ஏற்பட்டது போன்ற இடத்தை தீயணைப்பு-மீட்புப் படையினர் பாதுகாத்து வருவது அந்த 10 வினாடி வீடியோவில் தெரிந்தது.
அதோடு சாலையில் தண்ணீரும் தேங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.