கோலாலம்பூர், டிசம்பர்-10 – கோலாலம்பூர் ஜாலான் செந்தூல் பசாரில் உணவங்காடி பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதன் பேரில், வேலையில்லாத 25 வயது இளைஞன் கைதாகியுள்ளான்.
செந்தூல் பசார் டாலாம் பேருந்து முகாமில் இரு நாட்களுக்கு முன் அவ்வாடவன் கைதானதாக, செந்தூல் போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஹ்மாட் சுகார்னோ மொஹமட் ச’ஹாரி (Ahmad Sukarno Mohd Zahari) தெரிவித்தார்.
டிசம்பர் 5, காலை 6 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட 40 வயது பணியாளர் போலீசில் புகார் செய்ததை அடுத்து, சந்தே நபர் கைதானான்.
அவ்வாடவன் ஏற்கனவே 8 குற்றவியல் பதிவுகளையும், போதைப் பொருள் தொடர்பில் பதிவுகளையும் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
தினசரி கைச் செலவுக்காக பணம் கேட்டு மிரட்டியதை விசாரணையில் அவன் ஒப்புக் கொண்டான்; ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லையாம்.
அவன், அடிக்கடி அந்த உணவங்காடிக்கு வந்து போகும் அறிமுகமான ஆள் தான் என்றும் கண்டறியப்பட்டது.