Latestமலேசியா

ஜாலான் டூத்தாவில் தனித்தனியாகக் கழன்றிய லாரியின் தலையும் உடம்பும்; வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், நவம்பர்-24, கோலாலம்பூர் ஜாலான் டூத்தா டோல் சாவடியைக் கடக்கும் போது, டிரேய்லர் லாரியின் தலைப் பகுதியும் உடம்புப் பகுதியும் தனித்தனியாகக் கழன்றிய சம்பவம், சாலைப் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தின் போது, அந்த டிரேய்லர் லாரி சாலையின் ஆக இடப்பக்கத்திலிருப்பது வைரலான dashcam பதிவில் தெரிகிறது.

ஒரு வெள்ளை லாரியை கடந்ததும், டிரேய்லரின் உடம்புப் பகுதி திடீரென சொந்தமாக கழன்று வலது பக்கமாகப் போனது.

அந்த வெள்ளை லாரியை கிட்டத்தட்ட மோதும் அளவுக்குச் சென்று விட்ட டிரேய்லர் லாரியின் உடம்பு, பின்னர் சாலைத் தடுப்பருகே மோதி நின்றது.

மோதப்படுவதிலிருந்து தப்பிய வெள்ளை லாரி பயணத்தைத் தொடர்ந்தது.

வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், கனரக வாகனங்களின் பராமரிப்புக் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற அலட்சியங்களால் நெடுஞ்சாலை பயனர்களுக்கு ஆபத்தென்பதை ஓட்டுநர்களும் நிறுவனங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!