Latestமலேசியா

ஜாலான் பஹாங் அருகே பேருந்து நிறுத்துமிடத்திற்கு தனியாக நடந்துசென்ற தாதியைத் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர்

கோலாலம்பூர், மார்ச்-5 – கோலாலம்பூர், ஜாலான் பஹாங் சாலையில் ஹோட்டலொன்றின் எதிர்புறம் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு தனியாக நடந்து செல்லும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் தாக்கியதில், தாதி காயமடைந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தடிமனான பொருளைக் கொண்டு தலையின் பின்னால் அத்தாதி தாக்கப்பட்டதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் துணை ஆணையர் Sulizmie Affendy Sulaiman கூறினார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டன.

விசாரணையில் இறங்கிய போலீஸார், சம்பவ இடத்தருகே சனிக்கிழமை இரவு சந்தேக நபரைக் கைதுச் செய்தனர்.

தாள் வெட்டும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்நபரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை; வாய்மொழியாகவும் எதையும் கூறத் தெரியவில்லை.

இதையடுத்து கோலாலம்பூர் மருத்துவமனையின் மனநல வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!