கோலாலம்பூர், செப்டம்பர் 5 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு பகுதியில் டிக்டோக் செய்வதை நிறுத்துமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அப்பகுதியில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலை செய்யும் பணி பாதிக்கப்படும் வகையில் டிக்டோக் காணொளிகளை உருவாக்குவதை விரும்பவில்லை என்றும், அந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதை புரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.