
ஷா ஆலாம், நவ 28 – தமது வீட்டிற்கு வெளியே, ஜாலூர் கெமிலாங் தேசிய கொடியை தலை கீழாக தொங்க விட்டதற்காக, கிள்ளானில் வங்காளதேச ஆடவனைப் போலீசார் கைது செய்தனர்.
அக்குடியிருப்பு பகுதியின் தலைவர் ஆலோசனை கூறியும், அதை எதிர்த்து நின்றதோடு, கொடியை சரிசெய்யத் தவறியதால், அந்த ஆடவனுக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டதாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார் .
தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அந்த வங்காளதேச ஆடவன் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.