குபாங் பாசு, ஜனவரி-8 – கெடா, ஜித்ரா அருகே PLUS நெடுஞ்சாலையின் 37.5-வது கிலோ மீட்டரில் 3 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த மனைவி சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பினார்.
Proton Saga, Toyota Avanza மற்றும் டிரேய்லர் லாரி சம்பந்தப்பட்ட அவ்விபத்து, நேற்று மாலை 6 மணிக்கு மேல் நிகழ்ந்தது.
நொறுங்கிய Proton Saga காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவரை, தீயணைப்பு-மீட்புத் துறையினர் சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்த போதும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
இதையடுத்து அவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரின் மனைவி சிகிச்சைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேர் காயமின்றி தப்பினர்.
அவர்கள் முறையே Toyota Avanza-விலிருந்த ஓர் ஆணும் 2 பெண்களும், மற்றும் லாரி ஓட்டுநர்