Latestஉலகம்

ஜி 7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தினார்

பெர்லின் , ஜூன் 28 – ஜெர்மனியில் தொடங்கிய ஜி 7 தொழில்மய நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஏழு நாடுகளின் அரசாங்க தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒற்றிய தலைவருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்களை நடத்தினார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வாணிகம், முதலீடு, தொழிற்நுட்பம், பருவநிலை மாற்றம் குறித்து மோடி விவாதித்தார். மேலும் வட்டார மற்றும் உலகாளவிய விவகாரங்கள் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி , ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார். ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பெர்லின் சென்றடைந்த நநேரந்திர மோடியை ஜெர்மன் பிரதமர் Schoss Elmau வரவேற்றார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen னுடன் தாம் நடத்திய சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக மோடி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் மோடியை கைகுலுக்கி வரவேற்றனர். அதன் பிறகு உலகத் தலைவர்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!