புது டில்லி, மார்ச் 1 – ஒமிக்ரோன் வைரசால் மூன்றாம் கட்ட பாதிப்புக்கு ஆளான இந்தியாவில் அந்த தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட பாதிப்புக்கு இந்தியா தயாராக வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கையின்படி இவ்வாண்டு ஜூன் மத்தியில் இந்தியா கோவிட் தொற்றின் நான்காம் கட்ட அலைக்கு ஆளாகுமெனவும், அந்த பாதிப்பு 4 மாதங்கள் வரை நீடிக்குமெனவும் IIT Kanpur உயர்கல்வி கூட ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனினும் தொற்றின் பாதிப்பு எந்தளவு கடுமையாக இருக்குமென்பது, வைரசின் வகையைப் பொருத்திருக்குமென அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.