
சிரம்பான், பிப் 2 – 15ஆவது சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக ஜூன் 1 ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கலைப்பதற்கு அம்மாநில மந்திரிபுசார் அமினுடின் ஹருன் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். எனினும் அந்த உத்தேச தேதியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் விவாதித்து அங்கீகரிக்க வேண்டியிருப்பதாக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவருமான அமினுடின் தெரிவித்தார். சீனப் புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.