Latestஉலகம்

ஜூராஸிக் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறக்கும் ஊர்வனம் கண்டுபிடிப்பு

ஸ்கை , பிப் 23- ஸ்காட்லாந்திலுள்ள ஸ்கை (Skye) தீவில், டெரோசர் (Pterosaur) எனப்படும் மிகப்பெரிய பறக்கும் ஊர்வனத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர்கள் வாழ்ந்த ஜுராஸிக் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் அந்த பறக்கும் ஊர்வனம் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக , ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

2017 – இல் அகழாய்வு பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட அந்த புதைபடிவம் தற்போது ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் மேல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!