கோலாலம்பூர், மே 2 – நாட்டில் நிலவிவரும் El Nino வெப்ப சீதோஷ்ண நிலை ஜூலை மாதம்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அதிக வெப்பமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பபட்டுள்ளதாக இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்திருக்கிறார். இதர மாநிலங்களைவிட Kelantan , Perlis மற்றும் Kedah ஆகிய மாநிலங்களில் கடும் வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்போதைய அறிக்கையின்படி வழக்கமான நிலையில் வெப்ப நிலை மாறி மழை வரவேண்டும். ஆனால் இந்த நிலை இன்னும் ஒன்று இரண்டு மாதங்களுக்குப் பிறகே ஏற்படும் என Nik Nazmi கூறினார்.
இந்த விவகாரத்தை MET Malaysia எனப்படும் மலேசிய வானிலைத்துறை கண்காணிக்கும். இதனை தொடர்ந்து நாட்டிற்குள்ளும் எல்லைக்கு அப்பாலும் புகை மூட்டத்தையும் தமது தரப்பு கண்காணிக்கும் என Nik Nazmi தெரிவித்தார். மேலும் எரிபொருள் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் ஒத்துழைப்போடு நீர் மட்டத்தையும் தமது தரப்பு கண்காணிக்கும் என்றும் தேவைப்பட்டால் செயற்கை மழையை பொழியவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.