Latestமலேசியா

ஜூலை 10 தொடங்கி SPM அசல் சான்றிதழைப் பெறலாம்

கோலாலம்பூர், ஜூன் 10 –  இன்று இணையம் வாயிலாக 2020 SPM தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில்,  அந்த தேர்வு முடிவுக்கான அசல் சான்றிதழ்களை மாணவர்கள்,  அடுத்த  மாதம் ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி  பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு முன்னதாக தேர்வுச் சான்றிதழ்களை அச்சிடவும் நாடு முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு விநியோகிக்கவும் குறைந்தது ஆறு மாதக் காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

இம்முறை முழு அடைப்புக்கான கட்டுப்பாடுகள்  அமலில் இருந்தாலும், ஒரே மாதத்திற்குள் SPM  சான்றிதழ்கள் வெளியிட திட்டமிட்டிருப்பதாக,
கல்வியமைச்சர் Datuk Mohd Radzi Jidin தெரிவித்தார்.

எனினும், மாணவர்கள் தங்களது  சான்றிதழை பெற்றுக் கொள்ளும் முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என  Mohd Radzi கூறினார்.

சான்றிதழ்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது குறித்து கல்வியமைச்சும், பள்ளிக்கூடங்களும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!