Latestமலேசியா

ஜூலை 14, “STPM எனது முதல் தேர்வு” நிகழ்ச்சி – அரசாங்க உயர்கல்விக்கூடத்திற்குச் செல்ல வழிகாட்டும் CUMIG

ஜூலை 14, “STPM எனது முதல் தேர்வு” நிகழ்ச்சி – அரசாங்க உயர்கல்விக்கூடத்திற்குச் செல்ல வழிகாட்டும் CUMIG

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – மலாயா பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகள் நடவடிக்கை குழுவான CUMIG அமைப்பு, கடந்து 20 ஆண்டுகளாக மாணவர்கள் அரசாங்கப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

உயர்க்கல்விக்கூடத்திற்கு பாதை வகுக்கும் மெட்ரிக்குலேஷன், போலிடெக்னிக், தொழில் பயிற்சிக் கல்லூரி,STPM, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி எனப் பல வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் வாரியாகப் பல நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14ஆம் திகதி, பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயத்தில், STPM குறித்து முதல் தவணை மாணவர்களுக்கு வழிகட்ட நிகழ்ச்சி ஒன்றை, ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் Mohamed Nazri Bin Prem Nasir தெரிவித்தார்.

எஸ்.டி.பி.எம் தேர்வு என்பது ஒரு கடினமான தேர்வு என்கிற எண்ணம் மாணவர்களிடத்திலிருந்து நீக்கி, அத்தேர்வினை சரியான முறையில் எதிர்நோக்கப் பல நுணுக்கங்களைக் கற்பிக்க, CUMIG காத்திருக்கிறது.

பெட்டாலிங் ஜெயா இந்து சங்கம், மலாயா பல்கலைக்கழகத் தமிழ் பேரவை மற்றும் ஸ்ரீ சக்தி ஆலயமும் இணைந்து செய்கின்ற இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம்.

நீங்கள் STPM முதல் தவணை மாணவரா?
இவ்வாய்பை பயன்படுத்திக் கொள்ள, இன்றே மறவாமல் முன்பதிவு செய்து எஸ்.டி.பி.எம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!