புத்ராஜெயா, ஆகஸ்ட்-5, நேற்று பிற்பகல் சவூதி அரேபியாவின் ஜெடாவுக்குப் பயணமான MAS விமானம் MH156, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-க்குகே (KLIA1) திரும்பியதை, மலேசியப் பொது வான் போக்குவரத்து அதிகாரத் தரப்பு (CAAM) உறுதிப்படுத்தியது.
250-கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்களை ஏற்றியிருந்த அவ்விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
பாதுகாப்புக் கருதி பயணத்தை தொடருவதில்லையென முடிவு செய்யப்பட்டதாக CAAM கூறியது.
விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிச் செய்யப்பட்டது.
அச்சம்பவம் குறித்த முழு அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும் CAAM தெரிவித்தது.
உம்ரா யாத்திரைக்காக 259 பேரை ஏற்றியிருந்த MAS விமானம் KLIA-வில் இருந்து புறப்பட்ட 2 மணி நேரங்களில் மீண்டும் அங்கேயே திரும்பியதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.