ஜெம்போல், அக்டோபர் 1 – ஜாலான் Bukit Rokan Barat-தில் வாகனங்கள் மோதியதில், ஐந்து வயது மதிக்கத்தக்க 200 கிலோ கிராம் எடையுள்ள ஆண் தபீர் எனும் தும்பிப்பன்றி ஒன்று பலத்த காயங்களால், நேற்று இறந்தது.
புரோட்டான் X50 மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) ஆகிய இரண்டு வாகனங்களினால், தபீர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டு வாகன ஓட்டுநர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை; மாறாக வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளன.
எனினும், இச்சம்பவத்தில் தபீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.