Latestமலேசியா

ஜெய்ன் கொலை; ஆதாரப் பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஊடகவியலாளர்களுக்கு உத்தரவு

டமான்சாரா, டிசம்பர் 11 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டமான்சாரா டமாயிலுள்ள, இடமான் அடுக்குமாடி குடியிறுப்பின், ஆறாவது “புளோக்” அமைந்திருக்கும் பகுதியை காலி செய்யுமாறு இன்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கொலைக்கான ஆதாரங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்த பகுதியை சுற்றி இன்னும் போலீசார் விசாரணயை மேற்கொண்டு வருவதால், அவ்விடத்தை காலி செய்யுமாறு ஊடகவியலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

எனினும், அந்த கொலை தொடர்பான மிக அண்மைய நிலவரங்களை பெற, “புளோக்” S பகுதிக்கு அருகிலுள்ள, கூடாரத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

நேற்று, போலீஸ் தடயவியல் குழுவினர், மாதிரிகளை சேகரிக்க, கொலையுண்ட ஜெய்னின் வீட்டில் நுழைவதை காண முடிந்தது.

அதே சமயம், அந்த கொலைக்கான விசாரணைக்கு உதவுவதற்காக, பாலியல் குற்றம் உட்பட கடந்தகால குற்றப் பின்னணியை கொண்ட ஒவ்வொரு நபரையும் போலீசார் தணிக்கை செய்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!