ஜெர்மன், ஆகஸ்ட் 19 – ஜெர்மனியின் லெய்ஃப்சிக் (Leipzig) நகருக்கு அருகில் நடைபெற்ற இசை விழாவில் ராட்டினம் தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.
இரு ராட்டின மேடைகளில் கடந்த சனிக்கிழமை, மலேசிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
Ferris wheel என அழைக்கப்படும் அந்த ரங்க ராட்டினம் சுழலும் போது முதலில் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது.
அது காற்றில் சுழன்றதால், தீ மற்ற தொட்டிகளுக்கும் பரவி, இரண்டாவது ராட்டினமும் முழுவதுமாக தீயில் கருகின.
இவ்விபத்தில், பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் நான்கு பேர் தீக்காயம் அடைந்ததுடன், ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
காயமடைந்தவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என அந்நாட்டுக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.