Latestஉலகம்

ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஜப்பான்

டோஹா, நவ 24 – காத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் , தற்போது ஜப்பானும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வணி, E குழு நிலையிலான ஆட்டத்தில், நான்கு முறை உலக வெற்றியாளரான ஜெர்மனியை 2- 1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இவ்வேளையில், முக்கிய காற்பந்தாட்டத்தின் தொடக்கத்திலே ஜெர்மனி தோல்வி கண்டிருப்பது இது மூன்றாவது முறையாகும். அவ்வணி ஏற்கனவே, 2018- இல் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தில் மெக்சிகோவிடமும், 2020 யுரோ காற்பந்தாட்டத்தின் போது பிரான்சிடமும் தோல்வி கண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!