துருக்கியே, செப்டம்பர் -7 – ஜெர்மனி செல்லும் வழியில் இந்தியப் பயணிகள் விமானமொன்று ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ துருக்கி நாட்டின் கிழக்கே அவசரமாகத் தரையிறங்கியது.
மும்பையிலிருந்து Frankfurt நகருக்கு 247 பேருடன் பயணமான UK27 விமானம், Erzurum விமான நிலையத்தில் இரவு 7.05 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறங்கியதை, Vistara விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.
தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானத்தினுள் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு, தீயணைப்பு மீட்புத் துறை, மருத்துவக் குழுக்கள் ஆகியவையும் முன்னெச்சரிக்கையாக வரவழைக்கப்பட்டன.
விமான நிலையத்தின் வான்வெளியும் விமானங்களுக்கு மூடப்பட்டது.
என்றாலும், வெடிகுண்டு மிரட்டல் வந்த காரணத்தாலேயே விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுவரை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதிலும் வெடிகுண்டு குறித்து தெரிவிக்கப்படவில்லை.