Latestமலேசியா

ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்ட சிறுவன் Fahmi மரணம்

ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-21- பினாங்கு, பட்டவொர்த்தில் கண் வடிவிலான ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் ஆபத்தான நிலைக்குச் சென்ற 10 வயது சிறுவன் Mohamad Fahmi Hafiz Mohamad Fakhruddin, மரணமடைந்துள்ளான்.

பினாங்கு பெரிய மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு 11 மணிக்கு Fahmi-யின் உயிர் பிரிந்ததாக அவனது அத்தைக் கூறினார்.

இன்று காலை Fahmi நல்லடக்கம் செய்யப்படுகிறான்.

சுங்கை டுவா, KAFA சமய வகுப்பில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் Fahmi மயங்கி விழுந்ததை அடுத்து அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

மருத்துவப் பணியாளர்கள் அவனது தொண்டையிலிருந்து ஜெல்லி மிட்டாயை தோண்டி வெளியே எடுத்த போதும், அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், Fahmi உயிரிந்துள்ளான்.

தான் படிக்கும் சமய வகுப்புக்கு அருகிலிருக்கும் ஒரு கடையிலிருந்து அவன் அந்த ஜெல்லி மிட்டாய்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!