அலோஸ்டார், ஏப் 7 – ஓப்ஸ் ஹரிராயாவை முன்னிட்டு ஜே.பி.ஜே எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் பஸ் ஓட்டுனர்களில் ஐவர் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 1 ஆம் தேதி முதல் நேற்று நள்ளிரவுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 வயது முதல் 60 வயதுவரை கைது செய்யப்பட்ட அந்த பஸ் ஓட்டுனர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாக சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குனர் டத்தோ லோக்மான் ஜம்மான் தெரிவித்தார்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் Methamphetamine போதைப் பொருளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அலோஸ்டார் ஷஹாப் பெர்டானா பஸ் நிலையத்தில் இரு பஸ் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். கிழக்குக்கரை மாநிலத்திற்கு பயணத்தில் ஈடுபடவிருந்த இரு ஒட்டுனர்களுடன், சரவாக்கில் இரு பஸ் ஓட்டுனர்களும் கோத்தா பாருவில் மற்றொரு பஸ் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டனர், நோன்பு பெருநாள் காலத்தில் பஸ் ஓட்டுனர்களிடம் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படும் என லோக்மான் ஜம்மான் தெரிவித்தார்.
இதனிடையே தங்களது பயணத்தில் இருக்கும் இடம்பெற்றிருக்கும்போது கை தொலைபேசியை பயன்படுத்தும் பஸ் ஓட்டுனர்கள் காணும் பொதுமக்கள் உடனடியாக தங்களிடம் புகார் தெரிவிக்கும்படி அவர் பயணிகளை கேட்டுக்கொண்டார்.