
ஜோகூர் பாரு , ஜன 27 – ஜொகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 868 பேராக அதிகரித்துள்ளது.
அவர்கள் அனைவரும் 50 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசாங்க செயலாளர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
மெர்சிங் வெள்ளத்தால் மிக மோசமான பாதிக்கப்பட்ட மாவட்டமாக திகழும் வேளை ; அங்கு இதுவரை ஆயிரத்து 793 பேர் 11 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
ஆகக் கடைசியாக, ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டாவது மாவட்டமாக தங்காக் திகழ்கிறது. குளுவாங், செகாமாட், கோத்தா திங்கி, பத்து பஹாட், மூவார், பெந்தியான் ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.